திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

 

திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக ,மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,தமிழக வாழ்வுரிமை, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இத்துடன் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதில் காங்கிரசுக்கு 25 , விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி,ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.கே.நகர் தொகுதி,அம்பத்தூர் தொகுதி,வாணியம்பாடி, ஆம்பூர்,அரூர் சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளில் சில கேட்டு வருகிறது. இந்த சூழலில் இன்று தொகுதி பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு முடிவாகியுள்ளது. இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் சுமார் 180 தொகுதிகளுக்கு மேலாக களம்காணவுள்ளது.