‘உதயசூரியனை பிரதிபலித்த 6 ஆயிரம் இளைஞர்கள்’: நெகிழ்ச்சியடைந்த மு.க ஸ்டாலின்

 

‘உதயசூரியனை பிரதிபலித்த 6 ஆயிரம் இளைஞர்கள்’: நெகிழ்ச்சியடைந்த மு.க ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் திமுக, பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியன் புது விதமான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ‘ஹியூமன் இமேஜ் ஆப் ரைசிங் சன்’ என்ற தலைப்பில் 6,000 இளைஞர்கள் திமுகவின் ‘உதயசூரியன்‘ வடிவில் அணிவகுத்து நின்றனர்.

‘உதயசூரியனை பிரதிபலித்த 6 ஆயிரம் இளைஞர்கள்’: நெகிழ்ச்சியடைந்த மு.க ஸ்டாலின்

சின்னத்தில் இருக்கும் மலை வடிவத்தில் 2000 பேரும் சூரியன் அரைவட்ட வடிவில் 1,500 பேரும் 4 சிறிய கதிர் வடிவத்தில் தலா 250 பேரும், 5 பெரிய கதிர்வடிவத்தில் தலா 300 பேரும் நின்றனர். இந்த அணிவகுப்பு திமுகவின் உதயசூரியன் சின்னத்தை காட்சியளித்தது. இதை நேரில் பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பங்கேற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

‘உதயசூரியனை பிரதிபலித்த 6 ஆயிரம் இளைஞர்கள்’: நெகிழ்ச்சியடைந்த மு.க ஸ்டாலின்

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்தை அற்புதமாக பிரதிபலிக்க ஏற்பாடு செய்த மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். தொடர்ந்து, இதை பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எழுவதாகவும் உலக சாதனையாக அது அமையும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.