“இனி என் படங்களை பயன்படுத்த கூடாது” : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

 

“இனி என் படங்களை பயன்படுத்த கூடாது” : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

பேனர், ஃப்ளக்ஸ், பட்டாசுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இனி என் படங்களை பயன்படுத்த கூடாது” : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடிமை ஆட்சியாளர்களால் இருளில் உள்ள தமிழகத்துக்கு விடியல் தர உள்ள தலைவர் ஸ்டாலின் அவர்களின் எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்க்கையில் திமுக அரசு அமைவது உறுதி என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு மகிழ்ச்சியான சூழலில் சில தர்மசங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உற்சாக மிகுதியில் கழக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று ஃபிளக்ஸ், பேனர்கள் வைப்பதில் காணமுடிகிறது. தயவு செய்து அவற்றை அறவே தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“இனி என் படங்களை பயன்படுத்த கூடாது” : உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

இதேபோல் சுவரொட்டிகளில் என் படங்களை பயன்படுத்த கூடாது. திராவிட கழகத்தை கட்டமைத்த பெரியார் ,பேரறிஞர் ,அண்ணா, முத்தமிழ் கலைஞர் ,நம்மை வழிநடத்தும் கழகத் தலைவர் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும்என்னை வரவேற்கும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கிறார்கள்; அதையும் தவிர்க்க வேண்டும்.

எனக்கு நினைவு பரிசு தரும் தோழர்கள் சால்வைகள், பூங்கொத்துக்கள் ,மாலைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு புத்தகங்களை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். ஏற்கனவே நீங்கள் வழங்கிய புத்தகங்களை அரியலூரில் அனிதா பெயரில் இயங்கும் நூலகத்திற்கு அளித்துள்ளேன். அதேபோல் இனி நீங்கள் தரும் புத்தகங்கள் பலருக்கும் பயன்தரும். எளிமையியே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.