வழக்கு தொடர்ந்ததால் தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது : மு.க ஸ்டாலின் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainவழக்கு தொடர்ந்ததால் தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது : மு.க ஸ்டாலின்

MK Stalin
MK Stalin

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  வல்லக்கோட்டையில் திமுக சார்ப்பில் இன்று சமத்துவப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மண் அடுப்பு மற்றும் பானையைப் பயன்படுத்திப் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. அதில், திமுக உறுப்பினர்களும் பல்வேறு மதத்தினை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். 

ttn

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடமும் பேசிய மு.க ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் போது திமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெரும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடக்கும் என்பதால் தான் திமுக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது என்றும் அதனை முறையாக நடத்தி இருந்தால் யாரும் வழக்குப் போடப் போவதில்லை என்றும்  முறைகேடாகத் தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். மேலும், வழக்கு தொடர்ந்ததால் தான் திமுக அதிக இடங்களில் வென்றது என்றும் தேர்தல் முறையாக நடத்தப்பட்டிருந்தால் திமுக 100% அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.