ஈரோட்டில் 10 ஆண்டுகளுக்கு பின் 2 தொகுதிகளில் வென்ற திமுக!

 

ஈரோட்டில் 10 ஆண்டுகளுக்கு பின் 2 தொகுதிகளில் வென்ற திமுக!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், 2 இடங்களில் எண்ணும் பணி நடந்தது. மொத்தமுள்ள 8 தொகுதிகளில், திமுக ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி ஆகிய 5 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது.

இதில், மேற்கு தொகுதியில் போட்டியிட்ட முத்துசாமி, அதிமுக சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கே.வி.ராமலிங்கத்தை விட கூடுதலாக 22 ஆயிரத்து 89 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஈரோட்டில் 10 ஆண்டுகளுக்கு பின் 2 தொகுதிகளில் வென்ற திமுக!

இதேபோல், அந்தியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடாச்சலம், அதிமுக வேட்பாளர் சண்முகவேலை விட கூடுதலாக 1,275 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பவானி, கோபி, மொடக்குறிச்சி தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஈரோட்டில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி திமுக தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.