விரைவில் திமுகவுக்கு இன்னொரு எம்.பியும், ஒரு எம்எல்ஏவும் கிடைக்க வாய்ப்பு!

 

விரைவில் திமுகவுக்கு இன்னொரு எம்.பியும், ஒரு எம்எல்ஏவும் கிடைக்க வாய்ப்பு!

அதிமுகவின் ஆர்.வைத்திலிங்கம் மாநிலங்களவை எம்.பியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஒரு வருட பதவி காலம் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில் இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். ஆகவே இவர் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் இவரால் காலியாகும் மாநிலங்களவை எம்.பி பதவி திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு நிச்சயம் கிடைக்கும். பெரும்பாலும் கார்த்திகேய சிவசேனாபதிக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் திமுகவுக்கு இன்னொரு எம்.பியும், ஒரு எம்எல்ஏவும் கிடைக்க வாய்ப்பு!

அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளாரான கே.பி முனுசாமி சென்ற ஆண்டு தான் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார். இருப்பினும் அவர் தமிழக அமைச்சர் ஆகும் ஆசையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் அதிமுக தேர்தலில் படுதோல்வியடைந்து விட்டதால், எம்எல்ஏ பதவியை ஏற்காமல் எம்.பியாகவே அடுத்த 5 ஆண்டுகளும் தொடர இவர் விரும்புவதாக தெரிகிறது. இதனால் ஒரு எம்எல்ஏ தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இதில் திமுக வேட்பாளர் வெல்லுவது நிச்சயம். வேட்பாளர் யார் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுகவுக்கு இன்னொரு எம்.பியும், ஒரு எம்எல்ஏவும் கிடைக்கப்பெற்று ஸ்டாலினின் கை இன்னும் வலிமையடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை