சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

 

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுத்ததால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை வரைவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அரசு மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க நாளை சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திமுக கோரிக்கை வைத்ததுடன், புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததுடன், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்த இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார் . இதன் காரணமாக திமுகவினர் பேரவையில் இருந்து வெளியேறினர்.