ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

 

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்முறை கொரோனா காரணமாக ச பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளது. இது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் ,அலுவலக ஊழியர்கள் , பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

இந்நிலையில் கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கி ஆளுநர் உரையை வாசிக்கும் முன்பே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பியதுடன் வெளிநடப்பு செய்தனர்.