எய்ம்ஸ் செங்கலை ஸ்டாலினிடம் கொடுத்த உதயநிதி

 

எய்ம்ஸ் செங்கலை ஸ்டாலினிடம் கொடுத்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்துள்ளது. திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதிமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக வெற்றி வாகை சூட உள்ளது.

எய்ம்ஸ் செங்கலை ஸ்டாலினிடம் கொடுத்த உதயநிதி

குறிப்பாக முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை விட 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிரச்சாரத்தின்போது உதயநிதி குறிப்பிட்டு பேசிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை தற்போது தனது தந்தையும், திமுக தலைவருமான தலைவருமான ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த தேர்தல் பரப்புரையின் போது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக -பாஜக சேர்ந்த மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதை நான் கையோடு கொண்டு வந்து விட்டேன் என்று, எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலோடு பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து பாஜக சார்பில் உதயநிதி செங்கலை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை ஸ்டாலினிடம் உதயநிதி ஒப்படைத்துள்ளார். அத்துடன் இதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.