“சசிகலாவின் சபதத்தை தடுக்க ஜெ.நினைவிடம் மூடல்!”

 

“சசிகலாவின் சபதத்தை தடுக்க ஜெ.நினைவிடம் மூடல்!”

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.80கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள நினைவிடமானது 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நினைவிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.இந்த சூழலில் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா போன்ற இடங்களில் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

“சசிகலாவின் சபதத்தை தடுக்க ஜெ.நினைவிடம் மூடல்!”

ஆனால் ஜெயலலிதா நினைவிடம் சசிகலா வருகையால் தான் மூடப்பட்டதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. சிறைக்கு செல்லும் முன் சசிகலா ஜெ. நினைவிடத்தில் 3 முறை தரையில் அடித்து சபதம் செய்துவிட்டு சென்றார். இதனால் அவர் சென்னை திரும்பியதும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்று சொல்லப்பட்டது.

“சசிகலாவின் சபதத்தை தடுக்க ஜெ.நினைவிடம் மூடல்!”

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சப்தம் எடுத்துவிடுவார் என்ற அச்சத்தால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.