கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் ‘திமுக அறக்கட்டளை’!

 

கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் ‘திமுக அறக்கட்டளை’!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார். தற்போது ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத அளவுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. மக்களை காக்க அரசு அனைத்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு உதவி கரம் நீட்டுங்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் ‘திமுக அறக்கட்டளை’!

முதல்வரின் கோரிக்கைக்கிணங்க பல தொழில் நிறுவனங்கள் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அந்தவ கையில் நேற்று, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வரைச் சந்தித்து ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கினார். அதே போல சன் டிவி குழுமம் ரூபாய்.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி நிதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்த பணத்தை கொடுப்பதாக அறக்கட்டளை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.