சர்ச்சை ஆடியோ – காடுவெட்டி தியாகராஜன் விளக்கம்

 

சர்ச்சை ஆடியோ – காடுவெட்டி தியாகராஜன் விளக்கம்

திருச்சி

குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசும் விதமாக வெளியான ஆடியோ தன்னுடையது அல்ல என, திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன். இவர் குறிப்பிட்ட சமூகத்தையும், அந்த சமூக பெண்களையும் இழிவாக பேசியும், போலீசாரை அவதூறாக பேசுவது போன்றும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டனமும் தெரிவித்த வந்தனர்.

சர்ச்சை ஆடியோ – காடுவெட்டி தியாகராஜன் விளக்கம்

இந்நிலையில் சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் அளித்து தியாகராஜன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த ஆடியோ தான் பேசியது அல்ல என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, சிலர் விஷம பிரசாரத்தை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுகொண்டுள்ள தியாகராஜன், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.