அப்பா – மகனுக்கு ஒரேநாளில் இன்டர்வியூ : ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ்!

 

அப்பா – மகனுக்கு ஒரேநாளில் இன்டர்வியூ : ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ்!

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் திமுகவில் கடைசி நாளாக இன்று நடத்தப்படுகிறது.

அப்பா – மகனுக்கு ஒரேநாளில் இன்டர்வியூ : ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் விசிக 6 , கம்யூனிஸ்ட் 6, முஸ்லீம் லீக் 3, மனித நேய மக்கள் கட்சி 2 என் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் காங்கிரஸ், மதிமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை.இந்த சூழலில் திமுக தொகுதி பங்கீடு ஒருபுறம் இருந்தாலும், திமுக வேட்பாளர் நேர்காணல்களும் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.

அப்பா – மகனுக்கு ஒரேநாளில் இன்டர்வியூ : ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ்!

இந்நிலையில் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று கலந்து கொள்கிறார்.கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு தந்த நிலையில் ஸ்டாலினுடன் இன்றும் நேர்காணல் நடத்துகிறது திமுக. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மனு தந்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்கிறார்.கருணாநிதி மறைவுக்கு பிறகு உதயநிதி லாவகமாக அரசியல் களத்தில் களமிறக்கப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் உதயநிதி கடுமையான பிரசாரத்தை நடத்தி மக்கள் மத்தியில் அரசியல்வாதியாக பார்க்கப்பட்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் குஷ்பூ களமிறங்குவார் என்று தெரிகிறது. சீனியர்கள் இருக்கும் போதே மகனை அரசியலில் முக்கிய புள்ளியாக நினைக்கும் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலை அதற்கான பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார்.