சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

 

சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்து வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளையும் வழங்கியது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளையும் கொடுத்தது.

சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

கூட்டணி கட்சிகள் எதுக்குமே கேட்ட தொகுதிகள் வழங்கப்படவில்லை. தேர்தலுக்காக திமுக களமிறங்கியிருக்கும் ஐபேக் நிறுவனம், திமுக கூட்டணி கட்சிகள் கடந்த சில ஆண்டுகளில் வாக்கு வங்கியை அதிகரித்திருக்கிறதா? என சர்வே எடுத்ததாம். அந்த சர்வேயின் அடிப்படையிலேயே தான் திமுக தொகுதிகளை வழங்கி வருவதாக தெரிகிறது. இதனால், அதிக தொகுதிகளை கேட்கும் மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.

சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- மதிமுக இடையே இன்று மாலை 5 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இதை மதிமுக ஏற்குமா? என்பது பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிய வந்துவிடும்.