திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

 

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவுடன் விசிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள், தொகுதிகளை இறுதி செய்வது மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

திமுக தனது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கடந்த வாரமே ஆரம்பித்து விட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திமுக தன்னுடன் கூட்டணி அமைக்கும் பிற கட்சிகளான மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது. சென்னை அறிவாலயத்தில் நாளை இந்த பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

இரு கட்சிகளுக்கும் திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது என்பது நாளை தெரிந்து விடும். திமுகவுடன் கூட்டணி அமைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.