மதுரை வரும் மோடி முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகும் மு.க.அழகிரி? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainமதுரை வரும் மோடி முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகும் மு.க.அழகிரி?

modi
modi

சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்து பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில்லை என்ற முடிவில் ஸ்டாலின் தெளிவாக இருப்பதையே அவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. 

kalaignar

தென் தமிழகத்தில் திமுகவின் அசைக்க முடியாத ஆளுமையாக அழகிரி இருந்திருப்பதால், திமுகவிற்குள் அழகிரி சேர்க்கப்படாத பட்சத்தில், அங்கு திமுகவின் வாக்குவங்கியில் அழகிரி கை வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

ஒரு வேளை, தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக அழகிரி செயல்பட்டால், அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக தெளிவான திட்டங்களை ஸ்டாலின் வகுத்து வைத்திருப்பதாகவே தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் திமுக சீனியர்கள் கூறி வருகின்றனர்.

stalin

இது ஒரு புறம் இருக்க, ஸ்டாலினை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என வெளிப்படையாக தெரிவித்தும், தன்னை இப்படிப் புறக்கணிப்பதை அழகிரியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். குடும்பத்திற்குள் மீண்டும் பூகம்பங்கள் வெடிக்க வேண்டாம் என்பதால், சில நாட்களுக்கு அமைதியாக இருப்போம் என்கிற மனநிலையில் அழகிரி இருப்பதாகவே அவரது வட்டாரங்கள் கூறி வந்தன.

இந்த நிலையில், சென்னை வந்திருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், மோடி மதுரை வரும்போது அவரது முன்னிலையில் அழகிரி இணைய வாய்ப்பிருப்பதாகவும், அழகிரிக்கு நெருக்கமான மதுரை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மதுரை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.