மாஸ் காட்டும் திமுக : தட்டி தூக்கிய வேட்பாளர்கள் !

 

மாஸ் காட்டும் திமுக : தட்டி தூக்கிய வேட்பாளர்கள் !

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே திமுகவுக்கு சாதகமான நிலையிலேயே முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 84 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

துறைமுகம் தொகுதி

சென்னை துறைமுகம் தொகுதி 8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சேகர் பாபு 8347 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி

திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி வெற்றி முகம் – சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திருவண்ணாமலை தொகுதி

திமுக வேட்பாளர் எ.வ வேலு, பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலுவை விட 17.178 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஆவடி தொகுதி

திமுக வேட்பாளர் சாமு. நாசர், அதிமுக அமைச்சர் பாண்டியராஜனைவிட 19098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

மதுரை வடக்கு தொகுதி

8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தளபதி 3476 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சரவணனை விட முன்னிலை

மாஸ் காட்டும் திமுக : தட்டி தூக்கிய வேட்பாளர்கள் !

விழுப்புரம் தொகுதி

8வது சுற்று நிறைவு – திமுக வேட்பாளர் லக்‌ஷ்மணன் 5207 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை

விளாத்திகுளம் தொகுதி

18வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 29,148 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திருச்செந்தூர் தொகுதி

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் எம். ராதாகிருஷ்ணனைவிட 21828 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி

விழுப்புரம் தொகுதி

7வது சுற்று அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 3,474 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் லக்‌ஷ்மணனை விட பின் தங்கியுள்ளார்

திருக்கோவிலூர் தொகுதி

மாஸ் காட்டும் திமுக : தட்டி தூக்கிய வேட்பாளர்கள் !

15வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் பொன்முடி 35,552 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கலிவரதனை பின்னுக்கு தள்ளி முன்னிலை

பாளையங்கோட்டை தொகுதி

திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் 18,411 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாள்ர் ஜெரால்டை பின்னுக்கு தள்ளி முன்னிலை

ராமநாதபுரம் தொகுதி

14 வது சுற்றில் திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் 18,310 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஜெயங்கொண்டம் தொகுதி

8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கண்ணன் 4707 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் கே.பாலுவை பின்னுக்கு தள்ளி முன்னிலை