‘மிஷன் 200 தான் இலக்கு…அடுத்த ஆட்சி நமதே’ ஜனவரியில் தேர்தல் பரப்புரை: மு.க ஸ்டாலின் பேச்சு!

 

‘மிஷன் 200 தான் இலக்கு…அடுத்த ஆட்சி நமதே’ ஜனவரியில் தேர்தல் பரப்புரை: மு.க ஸ்டாலின் பேச்சு!

சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏதுவாக ஜனவரி முதல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தின் முடிவில் திமுக தலைவர் ஸ்டாலின், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார். இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், “அடுத்து நடைபெறப் போவது நமது ஆட்சி தான். நாம் தான் ஆளப்போகிறோம். அதற்கான தகுதி நமக்கு உள்ளது. அடுத்தவர்களை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரச் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை ” என்று கூறினார்.

‘மிஷன் 200 தான் இலக்கு…அடுத்த ஆட்சி நமதே’ ஜனவரியில் தேர்தல் பரப்புரை: மு.க ஸ்டாலின் பேச்சு!

தொடர்ந்து, “உதய சூரியனும் கருணாநிதியும் தான் நமது வேட்பாளர்கள். சக்தியை முழுமையாக கொடுத்தால் மட்டுமே முழுமையான வெற்றி கிடைக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களில் வெல்வதற்காக நாம் கட்சியை நடத்த வில்லை. நான் என்பதை விடுத்து நாம் என்று நினைத்து உழைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் இது” என்று தெரிவித்தார்.

‘மிஷன் 200 தான் இலக்கு…அடுத்த ஆட்சி நமதே’ ஜனவரியில் தேர்தல் பரப்புரை: மு.க ஸ்டாலின் பேச்சு!

மேலும், “பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது முந்தைய ஐந்து வெற்றிகளுக்கு சமமானது. பாஜகவின் அதிகார பலம் மற்றும் அதிமுகவின் பணபலம் தேர்தலில் இருக்கும். பேரவை தேர்தலில் எந்த தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏதுவாக பிரச்சாரம் செய்வேன். ஜனவரி முதல் வாரத்தில் பிரச்சாரம் செய்வேன்.200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் இலக்கு” என்றும் கூறினார்.