விறுவிறுப்படையும் தேர்தல் பணி: நீலகிரி நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

விறுவிறுப்படையும் தேர்தல் பணி: நீலகிரி நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

விறுவிறுப்படையும் தேர்தல் பணி: நீலகிரி நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 2 முறையாக ஆட்சியை இழந்த திமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை குழு, கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சிக் கூட்டங்கள் என திமுக அதிரடி களப்பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை மூலமாகவே அரசை விமர்சிப்பது, அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என அதிரிபுதிரியாக களமிறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின்.

விறுவிறுப்படையும் தேர்தல் பணி: நீலகிரி நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் தேர்தல் என்பதால், தமிழக மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.