“என்னை மன்னித்து விடுங்கள்” : கொளத்தூர் மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு!!

 

“என்னை மன்னித்து விடுங்கள்” : கொளத்தூர் மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு!!

234 தொகுதிகளில் மாடல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“என்னை மன்னித்து விடுங்கள்” : கொளத்தூர் மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ,விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர் . இவர்களை ஆதரித்து மாவட்டம் தோறும் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“என்னை மன்னித்து விடுங்கள்” : கொளத்தூர் மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு!!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அயனாவரம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். அதனால் எல்லா மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்து விட்டு கொளத்தூர் தொகுதிக்கு வந்துள்ளேன். தாமதமாக வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். புயல், மழை, வெள்ளம், இயற்கை பேரிடர் என எது வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்து நிற்பேன். கொளத்தூர் தொகுதி முதல்வர் வேட்பாளர் தொகுதி என்ற சிறப்பு பெற்றுள்ளது. நான் முதல்வரானால் எல்லா நலத்திட்டங்களும் இங்கு வந்து சேரும். 234 தொகுதிகளில் மாடல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன்” என்றார்.