தோற்றதற்கு என்ன காரணம்? நிர்வாகிகளுக்கு சவுக்கடி கொடுக்க காத்திருக்கும் திமுக!!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainதோற்றதற்கு என்ன காரணம்? நிர்வாகிகளுக்கு சவுக்கடி கொடுக்க காத்திருக்கும் திமுக!! 

mk stalin
mk stalin

உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நேற்று மாலைவரை நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவியிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கான பதவிகளிலும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றிப்பெற்றது. 

mk stalin

ஆனால் ஒரு சில இடங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக, திமுக வசம் செல்லவிருந்த இடங்கள் அதிமுகவிடம் சென்றுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஏற்பட்ட திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. கன்னியாகுமரியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு திமுக – காங்கிரஸ் இடையே நிலவிய இடபங்கீடு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், துப்பாக்கிச்சூடு ஆகியவை திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், அங்கு திமுக வெற்றிப்பெறவில்லை என்பது வருந்ததக்க விஷயமாகவே உள்ளது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் கடுங்கோபத்திலிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

mk stalin

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நாளை தொடங்கவிருப்பதால், கூட்டத்தொடருக்கு பின் தோல்விக்கு காரணமாக இருந்த நிர்வாகிகள் மீது ஸ்டாலின்  நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.