ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் தி.மு.க.

 

ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் தி.மு.க.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில்,இந்திய வரைபடத்தின் அனைத்து பாகங்களும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் தி.மு.க.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ள இந்தக் காணொளியானது, நாட்டின் ஒருமைப்பாட்டையும் மாண்பையும் அழிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தேசதுரோக செயலாகும். காஷ்மீரில் அன்றாடம் பாடுபட்டு நம் நாட்டை காத்து வரும் முன்கள ராணுவ வீரர்களான நம் சகோதரர்களையும் காஷ்மீருக்காக உயிர் விட்ட அமரர்களின் புகழையும் தி.மு.க. வெளிப்படையாக இந்த காணொளி மூலம் அவமதித்துள்ளது.

ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் தி.மு.க.

கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கச்சத்தீவை தாரைவார்த்ததைப் போல காஷ்மீரை பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் தாரைவார்க்கிறதா பிரிவினை திராவிட முன்னேற்ற கழகம்?

இந்த செயல் மூலம் உள்ளூர் அரசியலே தெரியாத உதயநிதி ஸ்டாலின் சுதந்திரம் தொட்டு நாட்டின் முக்கியமான விஷயங்களை தவறாக சித்தரித்து மாட்டிக்கொள்வது தி.மு.க. வின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.