உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்

 

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்

உதயநிதியை வைத்து திமுக நடத்தும் தேர்தல் பிரச்சார காமெடி ஷோ, அந்தக் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘’ 40, 50 வருஷம் கட்சிக்கென்று பாடுபட்டது வேஸ்டா? நேற்றைக்கு வந்தவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?’’ என்று இவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகின்றனர்.

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் முந்திரிக்கொட்டைத் தனமாக நேற்றே திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் உதயநிதி. எந்த தொகுதியில், எந்தக் கட்சி போட்டி, யார் வேட்பாளர்? என்பதெல்லாம் முடிவு செய்யப்படாத நிலையில் முழுக்க உதயநிதியை புரமோட் செய்யும் நோக்கத்திலேயே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்

’’கொரோனா தாக்கம் இன்னமும் முழுமையாக விலகாத நிலையில் உதயநிதியின் நிகழ்ச்சிக்காக ஆட்களைத் திரட்டுவது ஆபத்தில் முடியும்’’ என பலரும் சென்னாலும் தலைமை அதை காது கொடுத்து கேட்கவில்லை. 100 நாட்களுக்கு பிரச்சார பயணத்தை ரெடி பண்ணி அதை மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பும் வேலை நடைபெற்று வருகிறது. கூடவே, ‘’ நிகழ்ச்சிகள் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும்’’ என கொடுக்கப்படும் இன்ஸ்ட்ரக்‌ஷன்தான் நிர்வாகிகளை ரொம்பவும் சூடேற்றியிருக்கிறது.

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்

இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத தென்மாவட்ட செயலாளர் ஒருவர் கூறியதாவது; ‘’ கிட்டத்தட்ட 10 வருஷம் எதிர்க் கட்சியா இருக்கிறதால நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை. கொரோனா பாதித்த இந்த வருஷத்தில் மட்டும் கணக்கு வழக்கில்லாமல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்திட்டு வருகிறோம். கொரோனா நிவாரணத்தில் தொடங்கி இணையவழி உறுப்பினர் சேர்க்கை, இணையவழி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்ணு ஓவ்வொரு நிகழ்ச்சிக்கும் லட்சக்கணக்கில் வாரி இறைத்திருக்கிறோம். இதுபோக மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் என்றும் பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்


இந்த லட்சணத்தில் இப்ப உதயநிதி நிகழ்ச்சிகளை மிக பிரமாண்டமா நடத்தச் சொல்றாங்க. பேசிப் பேசியே வளர்ந்த கட்சி திமுக. இப்பவும் கட்சியில் நல்ல பேச்சாளர்களுக்கு பஞ்சமில்லை. அவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தலைமை முன்னிறுத்தும் உதயநிதிக்கு மக்கள் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? மக்களை ஈர்க்க முடியாத இவரோட நிகழ்ச்சிக்கு நாங்க கைக்காசை செலவழித்து ஆட்களை திரட்ட வேண்டியிருக்குது.

உதயநிதி காமெடி ஷோ – கொதிப்பில் திமுக சீனியர்கள்


உதயநிதி நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தச் சொல்றவங்க தலைமையிலிருந்து நிதியுதவி பண்ணினால் பரவாயில்லை. ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் முழுக்க எங்க தலையில் கட்டினால் எப்படி? அரசியல் வாரிசை புரமோட் பண்றதுக்கும் நாங்கதான் அழணுமா என்ன! மொத்தத்தில் தேர்தலுக்குள்ள எங்களில் பெரும்பாலானோர் தெருவுக்கு வந்திருவோம் போல’’
இவ்வாறு அவர் கூறினார்.