திண்டுக்கல்-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தீர்மானம்

 

திண்டுக்கல்-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தீர்மானம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திமுக மண்டல விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5

திண்டுக்கல்-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தீர்மானம்

மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஐ.பெரியசாமி,

திண்டுக்கல்-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தீர்மானம்

வேளாண் சட்டத் திருத்தத்தில் உள்ள அத்தியாவசியப் பொருள் சட்டத்திருத்தம் உணவுப்பொருள் பதுக்கலை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், உதய் மின் திட்டத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், இலவச மின்சார திட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.