‘அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்’ : மு.க.ஸ்டாலின்

 

‘அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்’ :  மு.க.ஸ்டாலின்

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. இருப்பினும் இதற்கான இந்த ஒப்புதலும் இதுவரைஆளுநர் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை.

‘அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்’ :  மு.க.ஸ்டாலின்

இதனிடையே ஆளுநரின் பரிசீலனையில் சட்ட மசோதா இருப்பதாகவும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று ஆளுநருடன் சந்திப்பு நடத்தினர். அப்போது இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.