திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்!

 

திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்!

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்!

அந்த புகாரின் பேரில் இன்று காலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தாழ்த்தப்பட்டோர் பற்றி தவறாக பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 1 ஆம் தேதி ஆஜராகி ஜாமீனை பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.