வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

 

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

வேளாண் மசோதாக்களை எதிர்த்து திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றன.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான எம்.பிக்களை தன் வசம் கொண்ட பாஜக அரசு, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த மசோதாக்களை நிறைவேற்றியது. விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் என கூறப்படும் இந்த மசோதாக்களை எதிர்த்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, அதிமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் கீழ் அம்பியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார். அதே போல சென்னை மேற்கில் கே.சி வீரமணியும், கொருக்குப்பேட்டையில் கே.எஸ் அழகிரியும், வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதியும், பெருங்குடி கந்தன்சாவடியில் வைகோவும், சென்னை ஆட்சியர் அலுவலகத்தின் முன் கே.பாலகிருஷ்ணனும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

மேலும் கடலூரில் திருமாவளவனும், தாம்பரத்தில் ஜவாஹிருல்லாவும், கும்பகோணத்தில் முத்தரசனும், திருச்சியில் காதர் மொய்தீனும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.