“கறுப்புக்கொடி ஏந்துவோம் கண்டன முழக்கம் எழுப்புவோம்” திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

 

“கறுப்புக்கொடி ஏந்துவோம் கண்டன முழக்கம் எழுப்புவோம்” திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனால் வரும் 21 ஆம் தேதி மின் கட்டண உயர்வை எதிர்த்து திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

“கறுப்புக்கொடி ஏந்துவோம் கண்டன முழக்கம் எழுப்புவோம்” திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில் ‘கறுப்புக்கொடி ஏந்துவோம் கண்டன முழக்கம் எழுப்புவோம்’ என திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மின் கட்டண சலுகை, அவகாசம் வழங்க வலியறுத்தி ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் கறுப்புக்கொடி போராட்டத்தில் எல்லாரும் பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் பிரச்சனை ஒவ்வொன்றிற்கும் திமுகவிடம் இருந்தே முதல் குரல் வெளிப்படுவதாகவும் தீர்வுக்கான வழிமுறைகளை முன்வைக்கிறோம், அதனை செவிமடுக்கும் அரசியல் பக்குவம் அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் விற்பனைக்காக கொள்கைமுடிவு எடுக்கும் அரசிடம் மின்கட்டண விவகாரத்தில் கொள்கை முடிவு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.