கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், அதற்கு ஆதரவளிக்கும் தமிழக அரசை கண்டித்தும் கோவை மாநகர திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாய்பாபா காலனி பேருந்து நிலையம் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்றும், பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படாததாகவும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை எனறும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சரிவர செயல்படத்தப்பட வில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்து, விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த முதலமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அதிமுக அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் கூறினார்.