முதல்வர் இருக்கையில் மு.க.ஸ்டாலின்… குஷியில் திமுக தொண்டர்கள்!

 

முதல்வர் இருக்கையில் மு.க.ஸ்டாலின்… குஷியில் திமுக தொண்டர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கொரோனா காலக் கட்டத்தை கருத்தில் கொண்டு எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது. 500க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முதல்வர் இருக்கையில் மு.க.ஸ்டாலின்… குஷியில் திமுக தொண்டர்கள்!

கொரோனா பாதிப்பின் காரணமாக தொண்டர்கள், திமுகவினர் வீட்டில் இருந்தபடியே வெற்றியைக் கொண்டாட வேண்டுமென ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்களுக்கு முன்னிலையில் தான் பதவியேற்க விரும்பினேன். ஆனால், அதற்கான சூழல் நிலவவில்லை. தொண்டர்களின் உயிர் தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார். ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க, தொண்டர்கள் கூட்டத்தை கூட்டாமல் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

முதல்வர் இருக்கையில் மு.க.ஸ்டாலின்… குஷியில் திமுக தொண்டர்கள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தின் வாயிலில், பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதே போல, திருச்சி டிவிஎஸ் டோல்கேட், என்.எம்.கே காலனி பகுதிகளில் திமுக தொண்டர்கள் மக்களின் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.