“திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் உணர்கிறேன்” பத்மபிரியா ட்வீட்!

 

“திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும்  உணர்கிறேன்” பத்மபிரியா ட்வீட்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் பத்மபிரியா. மதுரவாயல் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்துவந்த இவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் பத்மபிரியாவும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் திமுக தலைவர் மு .க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் பத்மபிரியாவும் ஒருவர்.

“திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும்  உணர்கிறேன்” பத்மபிரியா ட்வீட்!

இந்நிலையில் பத்மபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன்.அதன்படி, மக்கள் பணி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.