நடிகர் விவேக் உடலுக்கு திமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

 

நடிகர் விவேக் உடலுக்கு திமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

நகைச்சவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4 மணி அளவில் உடல்நலக்குறைவால் காலமானார். திடீர் மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்யப்பட்டது. ஐ.சி.யூவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.

நடிகர் விவேக் உடலுக்கு திமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

நடிகர் விவேக்கின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விவேக்கின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் தமிழ் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர்கள் சூரி, மயில்சாமி, மனோபாலா, பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் உடலுக்கு திமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

அந்த வகையில், திராவிட முன்னற்றேக் கழக எம்.பி ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் சகோதரர் கார்த்திக் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.