கேக்குற இடத்தையெல்லாம் கொடுக்க முடியாது – திமுக கெடுபிடி!

 

கேக்குற இடத்தையெல்லாம் கொடுக்க முடியாது – திமுக கெடுபிடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிரடி பணியில் ஈடுபட்டிருக்கிறது திமுக. வேட்பாளர் நேர்காணல், தொகுதி பங்கீடு, பிரச்சார திட்டங்கள் என படு பிஸியாக இருக்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். முன்னில்லாத அளவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளிடம் மிக கறாராக இருப்பது போல தெரிகிறது. கடந்த தேர்தல்களிலெல்லாம் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் பெரும்பாலான இடங்களை திமுக கொடுத்துவிடும். ஆனால், இந்த முறை அப்படி இல்லை.

கேக்குற இடத்தையெல்லாம் கொடுக்க முடியாது – திமுக கெடுபிடி!

கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளில் பாதிக்கு பாதி தான் கொடுக்க திமுக முன்வருகிறதாம். வேறு வழியில்லாத கூட்டணிக் கட்சிகள் திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார்களாம். இதன் பின்னணியில் ஐபேக்கின் செயல்பாடுகள் இருப்பதாக கூட்டணிக் கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

கேக்குற இடத்தையெல்லாம் கொடுக்க முடியாது – திமுக கெடுபிடி!

அதாவது, கூட்டணிக் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளில் வாக்கு வங்கியை அதிகரித்திருக்கிறதா? மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? என்றல்லாம் சர்வே எடுத்து திமுகவிடம் ஐபேக் கொடுத்திருக்கிறதாம். அதனடிப்படையிலேயே விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனிடையே திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் அதிருப்தியிலேயே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கேக்குற இடத்தையெல்லாம் கொடுக்க முடியாது – திமுக கெடுபிடி!

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் மன சங்கடம் இருக்கத்தான் செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்போல் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடம் திமுக கறாராக இருப்பது கூட்டணி கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.