திமுகவை திட்டி ட்வீட்… போலீஸிடம் கோர்த்துவிட்ட எம்பி – பம்மிய ஆர்எஸ்எஸ் அபிமானி!

 

திமுகவை திட்டி ட்வீட்… போலீஸிடம் கோர்த்துவிட்ட எம்பி – பம்மிய ஆர்எஸ்எஸ் அபிமானி!

சமூக வலைதளங்களில் கட்சி அனுதாபிகளிடையே எப்போதுமே முட்டல், மோதல், உரசல் இருக்கும். சில நேரங்களில் வார்த்தை தடிக்கும். இதனால் இரு புறமும் வார்த்தைப் போர் தொடுக்கப்படும். கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் சண்டை போட்டவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பரஸ்பரம் வீட்டு உறுப்பினர்களையும் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். கடைசி வரை ஆரோக்கியமான விவாதம் என்றால் கிலோ என்ன விலை ரேஞ்சிலேயே கேட்பார்கள். இறுதியில் அந்த விவாதம் பிளாக்கில் போய் முடியும்.

திமுகவை திட்டி ட்வீட்… போலீஸிடம் கோர்த்துவிட்ட எம்பி – பம்மிய ஆர்எஸ்எஸ் அபிமானி!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அபிமானிகள் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி, கனிமொழி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் பேசவே வாய் கூசும் வகையிலான சொற்களைப் பிரயோகிப்பார்கள். அரசியல் ரீதியாக எதுவுமே பேசாமல் வெற்று கூச்சல்களுடன் ட்வீட் செய்வார்கள். அப்படியாக ட்வீட் செய்த தீவிர பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அபிமானி ஒருவர் வகை தொகையாக சிக்கிவிட்டார்.

அருண் என்ற பெயர் கொண்ட அந்நபர் கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து மிகவும் அவதூறாக ட்வீட் செய்திருந்தார். இதனை எப்படியோ திமுக எம்பி செந்தில்குமாரின் கண்களில் அகப்பட்டு விட்டது. உடனே அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்த அவர், அருண் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட ஐடிகளுக்கு டேக் செய்துவிட்டார். உடனே ரெஸ்பான்ஸ் செய்த சென்னை மாநகரக் காவல் துறை, இதுகுறித்து நோட் செய்துகொள்வதாக ட்வீட் செய்திருக்கிறது.

இதனால் பயந்துபோன அருண் உடனே தனது சர்ச்சை ட்வீட்டை நீக்கிவிட்டு செந்தில்குமாரிடம் மன்னிப்பு கோரினார். இனிமேல் கண்ணியமாக பதிவிடுவதாகவும் உறுதியளித்தார். அவரின் மன்னிப்பை ஏற்ற செந்தில்குமார் தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ட்விட்டரிலேயே சென்னை மாநகரக் காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.


இதேபோல சரவணன் நடராஜன் என்பவரும் கனிமொழி குறித்து கொச்சையாகப் பதிவுசெய்திருந்தார். அவர் மீதும் செந்தில்குமார் புகார் கொடுத்துள்ளார். சரவணன் நடராஜன் புகாரை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இதுவரை அவர் மன்னிப்பு கோரவில்லை.