“ஆட்சிக்கு வந்ததும் ‘இந்த’ 2 பேர் தான் டார்கெட்” – திமுக எம்பி எச்சரிக்கை!

 

“ஆட்சிக்கு வந்ததும் ‘இந்த’ 2 பேர் தான் டார்கெட்” – திமுக எம்பி எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில் எப்போதுமே கட்சி அபிமானிகளுக்கிடையே வார்த்தைப் போர் நடக்கும். குறிப்பாக திமுக மீது விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜக, ஆர்எஸ்எஸ் அபிமானிகள், நாம் தமிழர் உள்ளிட்ட எதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள் அவதூறாகவும் வாய் கூசும் வகையிலான சொற்களையும் பிரயோகித்து பதிவிடுவார்கள். அதேபோல ட்வீட் செய்திருந்த்யார் தீவிர பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அபிமானி ஒருவர்.

“ஆட்சிக்கு வந்ததும் ‘இந்த’ 2 பேர் தான் டார்கெட்” – திமுக எம்பி எச்சரிக்கை!

அருண் என்ற பெயர் கொண்ட அந்நபர் கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து மிகவும் அவதூறாக ட்வீட் செய்திருந்தார். இதனை எப்படியோ திமுக எம்பி செந்தில்குமாரின் கண்களில் பட, உடனே அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்துள்ளார். அதன்பின் அருண் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திடம் ட்விட்டரிலேயே புகார் அளித்தார். உடனே ரெஸ்பான்ஸ் செய்த சென்னை மாநகரக் காவல் துறை, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் ட்வீட் செய்தது.

இதனால் பதறிப்போன அருண் அலறியடித்து தனது சர்ச்சை ட்வீட்டை நீக்கிவிட்டு செந்தில்குமாரிடம் மன்னிப்பு கோரினார். இனிமேல் கண்ணியமாக பதிவிடுவதாகவும் உறுதியளித்தார். அவரின் மன்னிப்பை ஏற்ற செந்தில்குமார் தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். சரவணன் நடராஜன் என்பவரும் கனிமொழி குறித்து கொச்சையாகப் பதிவுசெய்திருந்தார். அவர் மீதும் செந்தில்குமார் புகார் கொடுத்துள்ளார். அவர் இதுவரை மன்னிப்பு கோரவில்லை.

அருணை மன்னித்து புகாரை வாபஸ் பெற்றது தவறு என்று திமுக அபிமானி ஒருவர் செந்தில்குமாரிடம் கடிந்துகொண்டார். அருண் நடிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அந்நபர், 2 பேர் மீதாவது வழக்கு பாய்ந்தால் தான் மற்றவர்கள் திருந்துவார்கள் என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “அந்த இரண்டு பேரு – கிஷோர் கே சாமி, மாரிதாஸ்” என்று தெரிவித்துள்ளார். ஒவர்கள் இருவரும் தீவிரமாக திமுகவை எதிர்த்து வருபவர்கள். கிஷோரின் ட்வீடடிலும் மாரிதாஸின் வீடியோவிலும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பார்கள். இதை மனதில் வைத்தே செந்தில்குமார் அவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.