உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க… கராத்தே தியாகராஜனை சீண்டும் தி.மு.க எம்.பி

 

உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க… கராத்தே தியாகராஜனை சீண்டும் தி.மு.க எம்.பி

ரஜினிகாந்த் வருகிற நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் கூறியதற்கு உங்கள் ஓனரை சொல்லச் சொல்லுங்கள் என்று தி.மு.க எம்.பி செந்தில் குமார் நக்கலாக பதிவிட்டுள்ளார்.

உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க… கராத்தே தியாகராஜனை சீண்டும் தி.மு.க எம்.பி

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க-வுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை, பேட்டி, பதிவுகளை வெளியிட்டு வரும் கராத்தே தியாகராஜன், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க… கராத்தே தியாகராஜனை சீண்டும் தி.மு.க எம்.பி

அப்போது வருகிற நவம்பர் மாதம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று கூறினார். இதை அனைத்து ஊடகங்களும் பெரிய செய்தியாக வெளியிட்டன. இந்த தகவல் தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

http://

தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கராத்தே தியாகராஜன் பேட்டி தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட ட்வீட் பதிவை ரீட்வீட் செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சார், அத உங்க ஓனரை வந்து சொல்ல சொல்லுங்க” எனக் குறிப்பிட்டுள்ளார். இதை ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருகின்றனர்.