’மும்மொழி எதிர்ப்பு நல்லது முதல்வரே! ஆனால்…?’ புதிய கேள்வி எழுப்பும் திமுக எம்.பி

 

’மும்மொழி எதிர்ப்பு நல்லது முதல்வரே! ஆனால்…?’ புதிய கேள்வி எழுப்பும் திமுக எம்.பி

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நாள் முதல் தமிழகத்தில் மீண்டும் விவாதப் பொருளாகி விட்டது அது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் தொடந்து புதிய கல்விக் குறித்த பேச்சுதான்.

புதிய கல்விக் கொள்கை’ இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு (2019) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தது. அதன்மீது நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

’மும்மொழி எதிர்ப்பு நல்லது முதல்வரே! ஆனால்…?’ புதிய கேள்வி எழுப்பும் திமுக எம்.பி

புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் எதிர்க்கப்பட்டாலும் தமிழகக் கட்சிகள் (ஓரிரு கட்சிகள் தவிர) ஒருமுனையில் நின்று எதிர்ப்பது மும்மொழிக் கல்வித் திட்டத்தைத்தான். புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை அம்சத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து இரு மொழி கல்வியே நீடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

’மும்மொழி எதிர்ப்பு நல்லது முதல்வரே! ஆனால்…?’ புதிய கேள்வி எழுப்பும் திமுக எம்.பி

இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினரான திமுக எம்பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் முதல்வருக்கு ஒரு கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்து EPS பேசியது நல்லது. மற்றும் திமுகவின் இரு மொழி கொள்கைக் கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது. NEP வரைவு மாநில அரசிடம் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டபோது மாநில அரசு இந்த ஆட்சேபனை எழுப்பியதா? மத்திய அரசு உடன்படவில்லை எனில் இது மாநில சுயாட்சிக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை அனுப்பியுள்ளனர். ஆனால், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் கருத்தை மாநில அரசு சார்ப்பில் அனுப்பப்பட்டிருக்கிறதா என்று திமுக எம்பி எழுப்பியிருக்கும் கேள்வி மூலம் விவாதம் இன்னொரு பரிமானம் எடுக்கிறது.