“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” : விவசாய கடன் தள்ளுபடி குறித்து கனிமொழி எம்.பி. ட்வீட்!

“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” : விவசாய கடன் தள்ளுபடி குறித்து  கனிமொழி எம்.பி. ட்வீட்!

விவசாய கடன் தள்ளுபடி குறித்து திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” : விவசாய கடன் தள்ளுபடி குறித்து  கனிமொழி எம்.பி. ட்வீட்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” : விவசாய கடன் தள்ளுபடி குறித்து  கனிமொழி எம்.பி. ட்வீட்!

இதனிடையே திமுக தேர்தல் பரப்புரையாக மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய மற்றும் கல்வி கடனை முற்றுலுமாக ரத்து செய்யும் என்றார். ஆனால் தேர்தல் வரும் முன்பே முதல்வர் பழனிசாமி விவசாய கடனை ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து, திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் , ““அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில் தமிழகத்தில் திமுக சொல்வது தான் நடக்கிறது. அதனால் இங்கு நடைபெறுவது திமுக ஆட்சி தான் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.