“ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும்” : கனிமொழி கருத்து!

“ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும்” : கனிமொழி கருத்து!

ரஜினியின் அரசியல் அறிவிப்பு திமுகவை பாதிக்காது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ல் அறிவிப்பேன் என்றும் இப்ப இல்லன்னா இனி எப்பவும் இல்ல, எல்லாத்தையும் மாத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் அரசியல் மாற்றம் மிகவும் முக்கியம் என்பதால் கட்சி தொடங்குகிறேன் என்றும் கூறியிருந்தார்.

“ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும்” : கனிமொழி கருத்து!

ரஜினிகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனவரி மாதம் கட்சி தொடங்கினால், தேர்தலில் யாருடன் ரஜினி கூட்டணி அமைப்பார்? தனித்து களம் காணுவாரா? என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இத்தகைய சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சியினர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும்” : கனிமொழி கருத்து!

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான் தெரியும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்திருக்கிறார். ரஜினி கட்சி தொடங்கினால் அது திமுகவையோ, திமுக வாக்கு வங்கியையோ பாதிக்காது என்றும் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியது அவரது விருப்பம் என்றும் கூறியிருக்கிறார்.