ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவுடன்… திமுக எம்.பி கனிமொழி திடீர் சந்திப்பு!

 

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவுடன்… திமுக எம்.பி கனிமொழி திடீர் சந்திப்பு!

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வேதாந்தா நிறுவனம், ஆக்சிஜன் உற்பத்தியை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியது. வேறு வழியில்லாமல் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவுடன்… திமுக எம்.பி கனிமொழி திடீர் சந்திப்பு!

இத்தகைய சூழலில், திமுக எம்.பி கனிமொழி ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினை திடீரென சந்தித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் இரண்டு குழுவினரை தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார் கனிமொழி. இருதரப்பும் வெவ்வேறு கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவுடன்… திமுக எம்.பி கனிமொழி திடீர் சந்திப்பு!

அந்த எதிர்ப்பு குழுக்கள் அளித்த மனுவில், தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக நீக்க வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட ஒருமித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை கனிமொழி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.