“பெரியார் சிலைக்கு காவி சாயத்துடன் செருப்பு மாலை” : இதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? எம்பி கனிமொழி

 

“பெரியார் சிலைக்கு காவி சாயத்துடன் செருப்பு மாலை” : இதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? எம்பி கனிமொழி

பெரியார் சிலை அவமதிப்பு செய்ய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பெரியார் சிலைக்கு காவி சாயத்துடன் செருப்பு மாலை” : இதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? எம்பி கனிமொழி

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” என்று பதிவிட்டுள்ளார்.

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியத்துடன் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து சென்றுள்ளனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெரியார் சிலை மீது இருந்த காவி சாயத்தை சுத்தம் செய்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்களுடன் இணைந்து திமுக, திக உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.