இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி திமுக அரசு வென்றுள்ளது – தயாநிதி மாறன்

 

இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி திமுக அரசு வென்றுள்ளது – தயாநிதி மாறன்

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணை 2,000 ரூபாய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனோ நிவாரண தொகையை அமைச்சர் சேகர் பாபுவும், எம்.பி தயாநிதி மாறனும் வழங்கினர்.

இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி திமுக அரசு வென்றுள்ளது – தயாநிதி மாறன்

அந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், சொல்வதை செய்வோம் என்ற எங்களது வாக்குறுதிக்கு ஏற்ப கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தினோம். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய், இரண்டாம் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களும் வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி திமுக அரசு வெற்றி பெற்றுள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆக்சிஜன் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்று கூறினார். மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் உறுதியளித்தார்.