அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் கோரி ஆ.ராசா ஆலோசனை

 

அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் கோரி ஆ.ராசா ஆலோசனை

ஊட்டி

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி, நீலகிரி எம்.பி., ஆ.இராசாதலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் கோரி ஆ.ராசா ஆலோசனை


தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு 10.4 சதவீத போனஸ்வழங்குவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேயிலை தூள் விலை அதிகரித்துள்ளதால், தற்போது லாபத்தில் நிர்வாகம் இயங்கி வரும்நிலையில் போனஸ் குறைக்கப்பட்டது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்துவது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா தலைமையில், கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி,தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் குன்னூரில் உள்ள தேயிலை தோட்ட கழகத்தில் நிர்வாக இயக்குநர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போதுதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.