சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி ஒன்றுகூடி நின்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது எனவே சட்டப் பேரவைக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போர்க்கொடி எழுப்பிய கட்சி தி.மு.க. கொரோனா பாதிப்பு பற்றி உண்மையான அக்கறை கொண்ட கட்சி போல தன்னைக் காட்டிக் கொண்டது.

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

ஆனால், இன்று கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-க்களின் கொரோனா அக்கறை காற்றில் பறந்ததை தொலைக்காட்சிகள் மூலமாக மக்கள் நேரடியாகவே பார்த்தனர். கொரோனா பரவலைத் தடுக்க சமூக ஒன்று கூடலைத் தவிர்க்க பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சமூக இடைவெளிவிட்டு, மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

தி.மு.க எம்.எல்.ஏ-க்களே இருவரை ஒருவர் இடித்தபடி நெருக்கமாக நின்றனர். நல்ல வேலை நீட் பற்றி கேள்வி எழுப்புவதற்காக மாஸ்கை அணிந்திருந்தனர். நீட் பிரச்னை இல்லை என்றால் அதை அணிந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய எம்.எல்.ஏ-க்கள் குறைந்தபட்சம் வெளியே மக்கள் காணும் இடங்களிலாவது சமூக இடைவெளியைக் கடைபிடித்திருக்கலாம். ஸூம் செயலி மூலம் பொதுக் குழுவை நடத்தியும் சமூக இடைவெளி பற்றிய தெளிவு அவர்களுக்கு இல்லையே என்று சமூக ஊடகங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.