அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏ-வின் தந்தை துப்பாக்கிச்சூடு!

 

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏ-வின் தந்தை துப்பாக்கிச்சூடு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியில் தாண்டவ மூர்த்தி மற்றும் குமார் என்பவருக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் அரசு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் உடன் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த செங்காடு பொதுமக்கள் உதவியுடன் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், தந்தை லட்சுமிபதி அவர்களை தடுக்க முற்படுகிறார். அப்போது தாண்டவமூர்த்தியின் ஆட்கள் லட்சுமிபதி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினார். இதில் லட்சுமிபதிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிபதி, தான் அனுமதிபெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தாண்டவமூர்த்தியை சுட்டதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.