சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

 

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தராததால் அதிருப்தி அடைத்த இவர், டெல்லி சென்று ஜெ.பட்டாவை சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் இவர் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து முக ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் தான் பாஜகவில் இணையவில்லை என கு.க செல்வம் தெரிவித்தார்.

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

சமீபத்தில் பாஜக தலைமையிடமான கமலாலயம் சென்ற போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் கவலை இல்லை என்றும் தமிழகத்தில் பிள்ளைகள் அரசியல் நடப்பதாகவும் கூறினார். இதனிடையே திமுகவில் இருந்து தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக முக ஸ்டாலின், குக செல்வத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெறுமாறு கு.க செல்வம் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்க கூடாது என குறிப்பிடப்படவில்லை என்றும் பாஜகவை சேர்ந்த பிரதமர் நேரில் வந்து கருணாநிதியை பார்த்தது அனைவருக்கும் தெரியும் என்றும் கட்சியின் மாண்பை தான் மீறுவதாக கூறுவது சரியல்ல என்றும் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுளார்.