அடுத்த விக்கெட்.. சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ‘திமுக எம்.எல்.ஏ’!

 

அடுத்த விக்கெட்.. சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ‘திமுக எம்.எல்.ஏ’!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த விக்கெட்.. சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ‘திமுக எம்.எல்.ஏ’!
திமுக வேட்பாளர் தியாகராஜன்

காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், திருப்பட்டினம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கீதா ஆனந்தனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக, தியாகராஜன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தியாகராஜன் இன்று தான் போட்டியிட வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டார்.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த திமுக எம்.எல்.ஏ கீதா ஆனந்தன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக, தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அறிந்த கீதா ஆனந்தன் கோரிமேடு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேசி வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.