கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கை

கோவையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பற்றி பல தவறான தகவல் பரவி வருகிறது, தமிழக அரசு கோவையில் கொரோனாத் தொற்று இல்லை என்று மறைக்க முயன்றால் அது பேராபத்தாக மாறிவிடும் என்று தி.மு.க எம்.எல்.ஏ காத்த்திக் எச்சரிக்கைவிடுத்தள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் இறப்பு குறித்து அரசு தினமும் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒருநாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் , கோவை செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் , 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளதோடு, அப்பகுதியில், 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கோவையில் , கொரோனா நோய்ப் பரவல் இல்லை. நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா கோவை மாவட்ட நிர்வாகம்?
கொரோனாவை பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.

http://


இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான தகவலைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...