திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

 

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது.

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுகவில் 6 அமைச்சர்கள் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.