பூட்டிய அறையில் ஏசி ஓடுகிறது… திமுகவின் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்!

 

பூட்டிய அறையில் ஏசி ஓடுகிறது… திமுகவின் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்டிராங் ரூமில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் வாக்கு எண்ணும் மையங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பூட்டிய அறையில் ஏசி ஓடுகிறது… திமுகவின் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்!

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் பூட்டிய அறை ஒன்றில் ஏசி செயல்பாட்டில் இருந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த திமுகவினர் உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். மாணவர்கள் வகுப்புகளை முடித்துவிட்டு ஏசியை நிறுத்தாமல் சென்று விட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

பூட்டிய அறையில் ஏசி ஓடுகிறது… திமுகவின் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்!

இதையடுத்து இன்று காலை கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்கு எண்ணும் மையத்தில் சோதனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரி இரண்டு நாட்களாக இயங்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பூட்டிய அறையில் ஏசி சர்வர்கள் இயக்கத்திலிருந்து உள்ளன. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று குற்றச்சாட்டினார்.

மேலும், கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால் கூடுதல் மேசைகளை போட்டு வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்த வேண்டும். வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் கணினி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வருவதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.